இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 9:52PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் டி11 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த ரவன்னி வலசனினிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது செயல்பாடானது, அவரது திறமை, கவனம் ஆகியவற்றின் அற்புதமான பிரதிபலிப்பு என்று குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, அவரது எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 400 மீட்டர் ஓட்டம் டி11 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று ரவன்னி வலசனினி இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். அவரது இந்த சிறந்த செயல்பாடு, அவரது திறமையையும் கவனத்தையும் அற்புதமாகப் பிரதிபலிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி"
(Release ID : 2327001)
TV/PLM/SH