சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 5:35PM by PIB Chennai
அசாம் மாநிலத் தலைநகரான குவஹாத்தியில், 8 நாட்கள் நடைபெறும் ஷில்ப் சமகம் மேளா 2026 எனப்படும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி இன்று (21.10.2026) தொடங்கியது. மத்திய அரசின் சமூக நீதி அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி, அக்டோபர் 28 புதன்கிழமை வரை நடைபெறும்.
குவஹாத்தி, கானாபாரா, ஃபார்ம் கேட் என்ற இடத்தில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த மேளா பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும் என்று அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பார்வையாளர்கள் பலதரப்பட்ட பாரம்பரியப் பொருட்களைக் கண்டுகளித்து, அவற்றை வாங்கி, கைவினைஞர்களையும் ஆதரிக்க இது ஒரு வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.
வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து கைவினைஞர்களை ஒன்றிணைத்து, இந்தியாவின் வளமான, பன்முகத்தன்மை வாய்ந்த பாரம்பரிய கைவினைப்பொருட்கள், கைத்தறிப் பொருட்களின் மரபை வெளிப்படுத்த இந்த மேளா உதவுகிறது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326056®=3&lang=1
(Release ID : 2326056)
***
SK/PLM/SH