இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 12:38PM by PIB Chennai
இந்திய கடற்படை, தனது வருடாந்திர இந்தோ-பசிஃபிக் பிராந்திய உயர்மட்ட உரையாடல் நிகழ்ச்சியை, 2026 நவம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை புதுதில்லியில் நடத்துகிறது. சர்வதேச அளவில் 18 நாடுகளை சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், கடற்சார் அறிவியல், பெருங்கடல் நிர்வாகம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இம்மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்தியா, இலங்கை கடற்படைகளின் முன்னாள் தலைவர்கள் பங்கேற்று கடற்படையின் சிறப்பம்சங்கள் குறித்த தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.
3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்திற்கு உட்பட்ட 18 நாடுகளை சேர்ந்த கடற்சார் பயிற்சியாளர்கள், விஞ்ஞானிகள், கடற்சார் கல்வி நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பரிமாற உள்ளனர். கடற்சார் நிலை குறித்த விழிப்புணர்வு மற்றும் கடற்சார் உள்கட்டமைப்பை பாதுகாப்பது உள்ளிட்ட 5 தலைப்புகளின் கீழ் இம்மாநாட்டில் கலந்துரையாடல்கள் நடக்க உள்ளன. குறிப்பாக, இந்தோ-பசிஃபிக் பிராந்திய நாடுகள் இடையேயான அறிவியல், தொழில்நுட்பம், கல்விசார் ஒத்துழைப்பு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327189®=3&lang=1&_gl=1
***
SS/LN/SH