ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0: இந்தியப் பருத்திக் கழகத்தின் தூய்மை நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 12:16PM by PIB Chennai

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியப் பருத்திக் கழகம், தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தலைமை அலுவலகம், கிளை அலுவலகங்கள் வாயிலாகத் தீவிரத் தூய்மைப் பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆவணங்கள் மேலாண்மை, கழிவுப் பொருட்கள் அகற்றும் பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

2026 அக்டோபர் 21 வரையிலான நிலவரப்படி, 156 என்ற இலக்கைத் தாண்டி 1,076 பழைய கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.82,469 என்ற இலக்கைக் கடந்து ரூ.3,45,707 வருவாய் ஈட்டப்பட்டு, அலுவலகங்களில் 200 சதுர அடி பரப்பளவிலான இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

குண்டூரில் உள்ள கிளை அலுவலகம் வாயிலாக 511 மின்னணுக் கழிவுகள் அடையாளம் காணப்பட்டு, அரசு மின்னணு சந்தை இணையதளம் மூலம் ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தூய்மைப் பணிகள், மரக்கன்றுகள் நடுதல், குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்தல் போன்ற தொடர் நடவடிக்கைகள் மூலம் அலுவலக வளாகங்களை பசுமையாகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் தூய்மையாகவும் பராமரிக்கும் தொலைநோக்குப் பார்வையை இந்நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327159&reg=3&lang=1&_gl=1

***

SS/PD/SH    


(வெளியீட்டு அடையாள எண்: 2327579) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी