பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
குடிமைப் பணிகளின் திறனை மேம்படுத்த பயிற்சி நிறுவனங்கள் சிறப்பு மையங்களாக உருவாக வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 3:14PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தம் தொடர்பான பயிலரங்கம் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்றது. இதில், மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றவுடனேயே பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை தொடங்கினார் என்று குறிப்பிட்டார். திறன் மேம்பாட்டு ஆணையம் பிரதமரால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது எனவும் கூறினார். அரசு பணியாளர்கள் தங்களது கடமையை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வதற்கான ஊக்கத்தை அளிக்க கூடியதும், சிறந்த அரசு சேவை சீர்திருத்த திட்டமான, கர்மயோகி திட்டத்தின் மூலம் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். உத்தரபிரதேசத்தில் 19 லட்சம் ஊழியர்கள் கர்மயோகி திட்டத்தில் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார். குடிமைப் பணிகளின் திறனை மேம்படுத்த பயிற்சி நிறுவனங்கள் சிறப்பு மையங்களாக உருவாக வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். பயிற்சி நிறுவனங்களை மேலும் பலப்படுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இந்த பயிலரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327336®=3&lang=1
***
SS/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2327569)
வருகையாளர் எண்ணிக்கை : 8