இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 1:40PM by PIB Chennai
மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் இயங்கும், நீர் வளங்கள், ஆறுகள் மேம்பாடு, கங்கை புனரமைப்பு துறையின் சார்பில், சிறப்பு தூய்மை இயக்கம் 6, 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. தூய்மை பணிக்காக 371 இடங்கள் கணடறியப்பட்ட நிலையில், அதில் 278 இடங்களில் வெற்றிகரமாக தூய்மைப்பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெற்றப்பட்ட 161 புகார்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளன. 1456 கோப்புகளும், 3460 மின்னணு கோப்புகளும் மறு ஆய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலங்கள், அதனை சுற்றியுள்ள இடங்களை சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன. துறைசார்ந்த உயர் அதிகாரிகளின் கண்காணிப்பில், தூய்மை, குறைதீர்ப்பு பணிகளின் இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327287®=3&lang=1&_gl=1
***
SS/LN/RJ