புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 7:26PM by PIB Chennai
விவசாய நிலங்களில் பயிர்ச் சாகுபடியுடன் சேர்த்து சூரிய ஒளி மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் சார்ந்த 'அக்ரிவோல்டாயிக்ஸ் உலக மாநாடு 2026' இரண்டாம் நாள் நிகழ்வுகளுடன் நிறைவடைந்தது.
இம்மாநாட்டின் அமைச்சர்கள் அளவிலான தொடர் அமர்வில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆற்றல் மற்றும் விவசாயத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது, நிலப் பயன்பாட்டை உகந்ததாக்குதல், மின் கட்டணச் சலுகைகள் மற்றும் 'விவசாயிகள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாடு இயக்கத்தை மாநிலச் சூழலுக்கு ஏற்பச் செயல்படுத்துவது குறித்து அவர்கள் விரிவாகப் பேசினர்.
குறிப்பாக, 2030-க்குள் 1 ஜிகாவாட் இலக்கை எட்டும் வகையில் 'அக்ரிவோல்டாயிக்ஸ் கொள்கை 2026' விரைவில் வெளியிடப்படும் என ஒடிசா அரசு அறிவித்தது. மின்சாரக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள 16 லட்சம் விவசாயப் பம்ப்செட்டுகளை சோலார் மயமாக்கும் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு விளக்கியது. மேலும், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களும் தங்களது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த திட்டங்களை இம்மாநாட்டில் எடுத்துரைத்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326832®=3&lang=1
***
SK/VK/RJ