மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

வங்கி துறையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 1:31PM by PIB Chennai

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம், இந்தியன் வங்கி இடையே வங்கி சேவையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தின் தலைமை இயக்குநர் திரு மகேஷ், இந்தியன் வங்கி செயல் இயக்குநர் திரு ராஜிவ் மிஷ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். வங்கித்துறையில் குவாண்டம் நிதி புத்தாக்கம், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். நிதி சேவையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது, வங்கி கோப்புகளை கையாளுவது, வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு தேவையான உதவிகள், முறைகேடுகளை தடுத்தல், பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பயனுள்ளதாக இருக்கும் என இந்தியன் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.      

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327274&reg=3&lang=1&_gl=1

***

SS/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327502) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी