இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 4:46PM by PIB Chennai
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊரக வளர்ச்சித் துறை, மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து, 2026 அக்டோபர் 22 அன்று புது தில்லியில் உள்ள 'கடமை மாளிகையில்' ஒரு நாள் மருத்துவப் பரிசோதனை முகாமை நடத்தியது.
தூய்மைப் பணியாளர்கள் உட்பட, ஊரக மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த மருத்துவப் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டனர்.
'சிறப்பு இயக்கம் 6.0'-ன் ஒரு பகுதியாக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இயக்கம் 2026 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நடைபெறுகிறது. இந்த முகாம், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை முதன்மையாகக் கொண்டு நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326653®=3&lang=1
(Release ID: 2326653)
****
SK/SV/SH