புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயல்பாடுகள்

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 4:32PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்கள், 'தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0'-ன் ஒரு பகுதியாக, 2026 அக்டோபர் 7 அன்று, ஒரு நாள் தூய்மைப் பணியை மேற்கொண்டன. இந்த முன்முயற்சி, பணியிடங்களில்த் தூய்மையை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவித்தல், பொறுப்பான கழிவு மேலாண்மையை உறுதி செய்தல், அலுவலக இடங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருந்தது.

மத்திய புள்ளியியல் அமைச்சகம், கே எல் பவன் வளாகத்தைச் சுற்றியுள்ள டால்ஸ்டாய் லேன், கே எல் பவன் வளாகம், ஜன்பத் சாலை ஆகிய மூன்று இடங்களில் விரிவான தூய்மைப் பணிகளை மேற்கொண்டது.

இதன் கள செயல்பாட்டுப் பிரிவு, நாடு முழுவதும் உள்ள தனது மண்டல,  துணை மண்டல அலுவலகங்களில் தூய்மைப் பணிகளையும், அலுவலக இட மேலாண்மை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இதில் அலுவலக இடங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும், தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த ஒரு நாள் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, 53 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326648&reg=3&lang=1

(Release ID: 2326648)

****

SK/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326853) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu