பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்ற சுக்செய்னுக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 7:41PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர்  ஈட்டி எறிதல் எஃப்55 பிரிவில், சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, வெண்கலப் பதக்கம் வென்ற சுக்‌செயினுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இந்த வெற்றி, சுக்‌செயினின் அர்ப்பணிப்பு, பல ஆண்டுகாலக் கடுமையான பயிற்சி, சர்வதேச அரங்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அவரது உறுதியைக் காட்டுகிறது என்று குறிப்பிட்ட திரு மோடி, அவரது இந்த சாதனை நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதுடன், எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகளைப் பெறுவதற்கான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

 

"2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சுக்செய்ன் மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார்! ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 55 பிரிவில் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த வெற்றி, அவரது அர்ப்பணிப்பு, பல ஆண்டுகாலக் கடுமையான பயிற்சி, சர்வதேச அரங்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அவரது உறுதியைக் காட்டுகிறது. நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சுக்செய்னுக்கு எனது வாழ்த்துகள். இந்த வெற்றி, அவர் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வழிவகுக்கட்டும்: பிரதமர் @narendramodi"

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326142&reg=3&lang=1

***

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326835) வருகையாளர் எண்ணிக்கை : 8