பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பணிக்கான சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் புதுதில்லியில் இந்தி நூலகத்தைப் பாதுகாப்புத்துறை திறந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 4:22PM by PIB Chennai

தூய்மைப் பணிக்கான சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் புதுதில்லியில் உள்ள பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் ஞானதீபம் என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட இந்தி நூலகத்தை பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் திறந்து வைத்தார்.

இந்தி புத்தகங்கள், இலக்கியங்களை படிப்பதை ஊக்குவிப்பதையும், அலுவலகப் பணிகளில் இந்தியை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும், அலுவல் மொழிக்கொள்கையை சிறப்பாக அமல்படுத்துவதன் மூலம் இந்தியில் பணியாற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தெற்கு கட்டடத்தில் சுமார் 35,000 சதுர அடி பரப்பளவிலான இடம் தூய்மைப்படுத்தப்பட்டது. பழைய ஆவணங்கள் அகற்றப்பட்டது. 1,361 மின் கோப்புகளும், 1,746 நேரடி  கோப்புகளும் நீக்கப்பட்டன. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326634&reg=3&lang=1

****

SK/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326777) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese