கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நவம்பர் 13, 14-ம் தேதிகளில் ஆசிய பசிபிக் வாகன பொறியியல் மாநாடு நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 3:43PM by PIB Chennai

இந்திய போக்குவரத்து மேம்பாட்டுக்கான தொழிற்முறை சங்கம் சார்பில், ஆசிய பசிபிக் வாகன பொறியியல் மாநாட்டின் 23வது பதிப்பு, 2026 நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் நடைபெறவுள்ளது. போக்குவரத்தில் பாதுகாப்பு, உறுதித்தன்மை, நுண்ணறிவு ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதில், இந்தியா, ஆசிய பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உள்ளனர். 1000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 500க்கும் மேற்பட்ட துறைசார் வல்லுநர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில், அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்தை வடிவமைத்தல், நவீன தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்துவது, புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.      

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326605&reg=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326771) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी