சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சட்ட சீர்திருத்தம் தொடர்பான தேசிய மாநாடு: குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 1:56PM by PIB Chennai

இந்திய சட்ட ஆணையம் சார்பில், ‘’கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் சட்ட சீர்திருத்தங்கள்: தேசிய, மாநிலங்களின் கண்ணோட்டம்” என்ற தலைப்பில், தேசிய அளவிலான 2 நாள் மாநாடு, புதுதில்லியில் 2026 அக்டோபர் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை,  குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். மத்திய சட்டம், நீதித்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் முன்னிலை வகிக்கும் இந்த மாநாட்டில், மாநில சட்ட ஆணையங்களின் பிரதிநிதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

 

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சட்ட சீர்திருத்தங்களில் தற்போதைய நடைறை சிக்கல்கள், கூட்டாட்சி, அரசியலமைப்பு, நீதித்துறை நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, நீதித்துறை சீர்திருத்தங்களில் மாநில அரசின் ஒத்துழைப்பு குறித்தும் இதில் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்திய சட்ட ஆணையம், மாநில சட்ட ஆணையங்கள் ஆகியவை இணைந்து சட்ட சீர்திருத்தம் தொடர்பான விதிமுறைகளை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. முதல்நாள் அமர்வில், சட்ட சீர்திருத்தத்தில் தொழில்நுட்ப, சமூக, பொருளாதார மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. சட்டத் துறையை மேம்படுத்துவதற்காக பகிரப்பட்ட அதிகாரங்கள், மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சி ஆகியவை குறித்து 2ம் நாள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325856&reg=3&lang=1

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326759) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी