இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 5:00PM by PIB Chennai
2026 செப்டம்பர் 2026 மாதத்திற்கான முக்கியத் தொழில்களின் தற்காலிகக் குறியீடு (அடிப்படை ஆண்டு 2022-23):
முக்கியத் தொழில்களின் குறியீடு, செப்டம்பர் 2025 உடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் 2026-ல் (தற்காலிகம்) ஆண்டு அடிப்படையில் 7.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, ஆகஸ்ட் 2026 (இறுதி) மாதத்தில் பதிவான 5.9 சதவீத வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும் .
இரும்புத் தாது, மின்சாரம், நிலக்கரி, சுத்திகரிப்புப் பொருட்கள், சிமெண்ட், எஃகு ஆகியவை முறையே 18.4 சதவீதம், 11.4 சதவீதம், 10.7 சதவீதம், 10.3 சதவீதம், 9.8 சதவீதம், 4.9 சதவீதம் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன.
சமீபத்திய மாதங்களில் நிலக்கரி, சுத்திகரிப்புப் பொருட்கள், எஃகு, இரும்புத் தாது ஆகியவை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்திகளாக இருந்துள்ளன.
முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 2.5 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம், ஏப்ரல்-செப்டம்பர் 2026 காலகட்டத்தில் 5.1 சதவீதமாக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326038®=3&lang=1&_gl=1
***
(Release ID : 2326038)
SK/PLM/SU