பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 3:41PM by PIB Chennai
மத்திய பணியாளர், பொதுக்குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-இன் கீழ் நடைபெற்ற மின்னணுக் கழிவுகள் அகற்றும் நிகழ்வில் பங்கேற்றார்.
அலுவலகங்களில் பயன்பாடற்ற மின்னணு உபகரணங்களை முறையாக அகற்றுவதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், அரசு மின்னணு சந்தை இணையதளம் வாயிலாக இக்கழிவுகள் ஏலம் விடப்படுவதாகத் தெரிவித்தார். இந்த இயக்கத்தின் முதல் 15 நாட்களில் கழிவுகளை அகற்றியதன் மூலம் சுமார் ரூ.490 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 31-க்குள் இது இருமடங்காக உயரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்துறையில் பயன்பாடற்ற 152 கணினிகள், 35 அச்சுப்பொறிகள், 52 குளிர்சாதனங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப, மின்னணு சாதனங்கள், மரச்சாமான்கள் சுமார் ரூ.9 லட்சம் குறைந்தபட்ச ஏல மதிப்பில் அரசு மின்னணு சந்தை இணையதளம் மூலம் ஏலம் விடப்படுகின்றன. இந்நிகழ்வில் மத்திய பணியாளர், பயிற்சித் துறைச் செயலாளர் ரச்னா ஷா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325966®=3
***
SK/PD/SU