பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சிம்ரனுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 8:58PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 மகளிர் 200 மீட்டர் டி12 பிரிவில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற சிம்ரனின் சிறப்பான செயல்பாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

கடந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், இம்முறை சிறந்த செயல் திறனுடன் செயல்பாட்டுடன் தங்கப் பதக்கம் வென்ற அவரது பயணம், சாதனை உணர்வை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.  அவர், தடைகளைத் தொடர்ந்து களைந்து புதிய சாதனைகளைப் படைக்கட்டும் என்று வாழ்த்து கூறினார்.   

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:

"தங்கப் பதக்கம் மற்றும் புதிய சாதனை!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 மகளிர் 200 மீட்டர் டி12 பிரிவில் சிம்ரன் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.  தங்கப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள்

கடந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், இம்முறை சாதனையை முறியடிக்கும் திறனுடன் தங்கப் பதக்கம் வென்ற அவரது பயணம், சாதனை உணர்வை வெளிப்படுத்துகிறது. அவர், தடைகளைத் தொடர்ந்து களைந்து புதிய சாதனைகளைப் படைக்கட்டும்"

***

(Release ID: 2325590)

SS/IR/SU/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2326092) வருகையாளர் எண்ணிக்கை : 7