நிதி அமைச்சகம்
நேபாளத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 591 கிலோ கஞ்சாவை டிஆர்ஐ அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 8:55PM by PIB Chennai
எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), உத்தரப் பிரதேசத்தில் 2026 அக்டோபர் 17–18, தேதிகளில் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் 591.3 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றியது. நேபாளத்திலிருந்து போதைப்பொருட்களை ஏற்றி வந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட லாரியில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மறைவிடங்களைப் பயன்படுத்தி கடத்தலில் ஈடுபட்டிருந்த நுணுக்கமான முறையை இந்த நடவடிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
கிடைக்கப்பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில், கோரக்பூரில் உள்ள டிஆர்ஐ அலுவலர்கள், லக்னோ, பாட்னா, வாரணாசி குழுக்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். சுமார் நான்கு மணி நேர காத்திருப்பிற்குப் பின், கோரக்பூர், குஷிநகருக்கு இடைப்பட்ட சாலையில் சந்தேகத்திற்குரிய அந்த வாகனம் கண்டறியப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.
வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வாகனத்தின் முன்பக்கமும், ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மறைவிடங்கள் கண்டறியப்பட்டன. இவற்றில் மொத்தம் 591.3 கிலோ எடையுள்ள, கஞ்சா அடங்கிய 81 பொட்டலங்கள் இருந்தன. சம்பந்தப்பட்ட லாரியும், போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325281®=3&lang=1
***
AD/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2325427)
வருகையாளர் எண்ணிக்கை : 7