சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - ஜப்பான் கூட்டுப் பணிக்குழுவின் 12-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 8:04PM by PIB Chennai

நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைக்கான இந்தியா - ஜப்பான் கூட்டுப் பணிக்குழுவின்  12-வது கூட்டம், புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில், இரு நாடுகளின் அரசுப் பிரதிநிதிகள், ரயில்வே மற்றும் மின்சார அமைச்சகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ‘வளர்ச்சியடைந்த இந்தியா @2047’ தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உலகத்தரம் வாய்ந்த மற்றும் பாதுகாப்பான உள்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

மேம்பட்ட கட்டுமானத் தொழில்நுட்பங்கள், சுரங்கம் மற்றும் பாலப் பொறியியல், டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் நிலையான உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324100&reg=3&lang=1

***

TV/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325304) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu