பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
புதுதில்லி, கடமை மாளிகை-3-ல் குழந்தைகள் காப்பகம், ரத்த தான முகாம்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 4:58PM by PIB Chennai
அரசு அலுவலக இடங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல், ஊழியர் நலன், ஆதரவான பணிச்சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு பரந்த ஆளுகை அணுகுமுறையின் மூலம் சிறப்பு தூய்மை இயக்கம் 6.0 நடத்தப்படுகிறது என்று பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். , இன்று (19.10.2026) தில்லி, கடமை மாளிகை 3-ல் பணியிட குழந்தைகள் காப்பகத்தையும் ரத்த தான முகாமையும் அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், 2014 முதல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நடைபெற்று வரும் தொடர்ச்சியான சீர்திருத்தப் பயணத்தை எடுத்துரைத்தார். நிர்வாக சீர்திருத்தங்கள் நிர்வாக நடைமுறைகளை எளிதாக்குவதையும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும் தாண்டி, அரசு ஊழியர்களின் நடைமுறைத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருவதாக அவர் கூறினார். ஊழியர்கள், குறிப்பாகப் பணிபுரியும் பெற்றோர், தங்கள் பொறுப்புகளை அதிகக் கவனத்துடன் நிறைவேற்ற உதவும் பணியிட வசதிகளை வழங்குவது, திறமையான நிர்வாகத்திற்கும் சிறந்த பொதுச் சேவை வழங்கலுக்கும் ஒரு முக்கியப்படி என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு ஊழியர்கள் தங்களின் அலுவல் பொறுப்புகளில் முழுக் கவனம் செலுத்த ஏதுவாக, அவர்களின் பணிச்சூழலுக்கு உரிய கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். ஊழியர்களுக்கு உகந்த சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உடற்பயிற்சிக் கூடங்கள், சிற்றுண்டிச்சாலை, உணவருந்தும் பகுதிகள் போன்ற பணியிட வசதிகளை அவர் குறிப்பிட்டார். மேலும், கடமை மாளிகை 3-ல் புதிதாக நிறுவப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகம், பணிபுரியும் பெற்றோரின் குழந்தை பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் குழந்தைகள் காப்பகம், 2,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளதுடன், சுமார் 30 முதல் 35 குழந்தைகளைத் தங்கவைக்கும் திறன் கொண்டது. இந்த வளாகத்தில், குழந்தைகளுக்கு ஏற்ற கழிவறைகள், பொம்மைகள், கற்றல் பொருட்களுடன் கூடிய பிரத்யேக விளையாட்டுப் பகுதி, ஒலி-ஒளிக் கருவிகள், சுத்தமான குடிநீர், உறங்கும் பகுதி, உணவூட்டும் அறை ஆகியவை உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2325144®=3&lang=1
****
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2325283)
வருகையாளர் எண்ணிக்கை : 4