ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தூய்மைக்கான சிறப்பு இயக்கத்தில் நில வளத்துறை தீவிர பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 12:39PM by PIB Chennai
மத்திய நில வளத்துறை, தூய்மையை நிறுவனமயமாக்குதல், பதிவேடு மேலாண்மையை வலுப்படுத்துதல், நிலுவையில் உள்ள பணிகளைத் துரிதப்படுத்துதல் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி, தூய்மைக்கான சிறப்பு இயக்கத்தின் ஆறாவது பதிப்பை செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் செயலாக்கம், நில வளத்துறைச் செயலாளரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வாராந்திரக் கூட்டங்களில் ஆய்வு செய்யப்படுகிறது.
நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில் இத்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட 12 தூய்மைப் பணிகளில், 5 முடிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த இயக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 90% பொதுமக்கள் குறைகள் இதுவரை தீர்க்கப்பட்டுள்ளன.
இந்த முன்முயற்சிகள், தூய்மையை நிறுவனமயமாக்குவதிலும், சிறந்த பணிச்சூழலை வளர்ப்பதிலும் இத்துறையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2325024®=3&lang=1
****
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2325276)
வருகையாளர் எண்ணிக்கை : 11