பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பாக தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 10:48AM by PIB Chennai
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் ஆயத்தக் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, செயல்பாட்டுக் கட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையை முதன்மையாகக் கொண்டு, மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் இந்த இயக்கம், தூய்மையை வலுப்படுத்துதல், செயல்திறனை மேம்படுத்துதல், டிஜிட்டல் நிர்வாகத்தை ஊக்குவித்தல், பணிச்சூழலையும் கலாச்சாரத்தையும் மேம்படுத்துதல், நிலுவையில் உள்ள விவகாரங்களை உரிய காலத்தில் தீர்த்தல், அலுவலக வளங்களைச் சிறப்பாக நிர்வகித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறப்பு இயக்கத்தின் மூலம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பொறுப்புமிக்க ஆளுகை, திறமையான பொது நிர்வாகம், பணியிட நடைமுறைகளில் நீடித்த முன்னேற்றம் ஆகியவற்றிற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும், தூய்மை, இணையவழிப் பாதுகாப்பு, நல்லாட்சி ஆகிய கொள்கைகள் துறையின் நிறுவனச் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுவதையும் இது உறுதி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324988®=3&lang=1
****
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2325109)
வருகையாளர் எண்ணிக்கை : 5