தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சிறப்பு தூய்மை இயக்கத்தில் அஞ்சல் துறை தீவிர பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
18 OCT 2026 6:57PM by PIB Chennai
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறை, 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6-ன் செயலாக்கக் கட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
சிறப்பு இயக்கம் 6-ன் கீழ், 1,50,000 பொது மக்கள் குறைகளுக்குத் தீர்வு காண்பது, 1,500 மேல்முறையீடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது, நாடு தழுவிய அளவில் 1,35,000 இடங்களில் தூய்மை இயக்கங்களை மேற்கொள்வது போன்ற லட்சிய இலக்குகளை அஞ்சல் துறை நிர்ணயித்துள்ளது.
தூய்மை இயக்கங்கள்: 1,35,000 இடங்கள் என்ற ஒட்டுமொத்த இலக்கில் ஏறத்தாழ 55% என்ற அளவில், தபால் நிலையங்கள் உட்பட 73,814 இடங்களில் அக்டோபர் 16 வரை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்கள் குறைதீர்ப்பு: 1,50,000 என்ற இலக்கிற்கு எதிராக, அக்டோபர் 16 வரையிலான காலத்தில், மொத்தம் 1,00,214 பொதுமக்கள் குறைகள் தீர்க்கப்பட்டு, இலக்கில் ஏறக்குறைய 67% எட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 3,06,026 கிலோ பழைய இரும்பு அகற்றப்பட்டு, ₹67.56 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 17,980 கிலோ மின்னணுக் கழிவுகள் அகற்றப்பட்டு, ₹27.64 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
சிறப்பு இயக்கம் 6-ன் எஞ்சிய காலத்தில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை முழுமையாக அடைவதற்கு, அஞ்சல் துறை தனது முயற்சிகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
மேலும் இவர்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324940®=48&lang=1
****
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324955)
வருகையாளர் எண்ணிக்கை : 9