வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நமோ பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டம் - மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
18 OCT 2026 5:28PM by PIB Chennai
நமோ பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு மூன்று வெற்றிகரமான ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், தேசிய தலைநகரப் பகுதி போக்குவரத்து கழகமான என்சிஆர்டிசி சார்பில் நமோ பாரத் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், இணையமைச்சர் திரு டோக்கன் சாஹு; வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில், நமோ பாரத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் நினைவுகூரப்பட்டன. இதில், முக்கிய மைல்கற்கள், பல்முனைப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகள், பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவது போன்றவை எடுத்துரைக்கப்பட்டன. இந்தச் சாதனைகளும், இத்திட்டம் அடைந்த முன்னேற்றமும் ஒரு ஆவணப் படத்தின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால், நமோ பாரத் அதிவேக ரயிலானது, இந்தியாவில் பிராந்திய இணைப்பின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்து, நகர்ப்புறப் போக்குவரத்தின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது என்றார். 2023 அக்டோபர் 20 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் இது தொடங்கி வைக்கப்பட்டதிலிருந்து, 82 கிலோ மீட்டர் நீளமுள்ள டெல்லி–காசியாபாத்–மீரட் வழித்தடத்தில் 4.5 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சாதனை, நவீன, பாதுகாப்பான, தடையற்ற போக்குவரத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்று திரு மனோகர் லால் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324914®=48&lang=1
****
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324929)
வருகையாளர் எண்ணிக்கை : 12