சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ஃபிரோஸ்பூர், ஃபரித்கோட்டில் நெல் அறுவடைக்குப் பிந்தைய கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 7:29PM by PIB Chennai
தேசிய தலைநகர் பிராந்தியம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏகியூஎம்) உயர்மட்டக் குழு ஒன்று, அதன் தொழில்நுட்ப உறுப்பினர் டாக்டர் டி.எஸ். பன்வார் தலைமையில், ஃபிரோஸ்பூர், ஃபரித்கோட் மாவட்டங்களைப் பார்வையிட்டது. அறுவடை பருவத்தில் நெல் அறுவடைக்குப் பின்பு வைக்கோல் எரிக்கப்படுவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்வதற்காக இந்தக் குழு அங்கு சென்றிருந்தது.
இந்தக் குழு, ஃபிரோஸ்பூர், ஃபரித்கோட் மாவட்டங்களின் துணை ஆணையர்கள் மற்றும் தொடர்புடைய மாவட்ட அதிகாரிகளுடன், ஃபிரோஸ்பூரில் ஒரு கூட்டு ஆய்வுக்கூட்டத்தை நடத்தியது. இதில், நெல் அறுவடைக்குப் பிந்தைய வைக்கோல் கழிவுகளை அந்தந்த இடங்களிலேயே அல்லது வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று முறையாக நிர்வகிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும், மாவட்ட நிர்வாகங்களின் தயார்நிலை மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறித்து குழு ஆய்வு செய்தது. மேலும், பயிர் கழிவு மேலாண்மை இயந்திரங்களின் இருப்பு, பயன்பாடு, கள அளவிலான கண்காணிப்பு, சிக்கல் மிகுந்த பகுதிகளைக் கண்காணித்தல் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324755®=3&lang=1
***
SK/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324911)
வருகையாளர் எண்ணிக்கை : 9