ஆயுஷ்
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், தேசிய ஆயுர்வேத வித்யாபீடம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 9:07PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் நடைபெற்ற கௌமராகான் 2026 மாநாட்டின்போது, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனமும், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆயுர்வேத வித்யாபீடமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம், தில்லி மற்றும் கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் ஆயுர்வேத குழந்தை மருத்துவத் துறையை, தேசிய ஆயுர்வேத வித்யாபீடத்திற்கான ஒரு சிறப்பு மையமாக அங்கீகரிக்கிறது.
இந்த அங்கீகாரம், ஆயுர்வேத குழந்தை மருத்துவத் துறையில் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்குதல், பயிற்சி அளித்தல், அறிவுசார் சொத்து உரிமைகள் மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கோவா மற்றும் புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் நடைபெறும் கூட்டு நிபுணர் ஆலோசனைகள் மூலம், ஸ்வர்ணபிராஷன் சம்ஸ்காரம் என்ற குழந்தைகளுக்கான பழங்கால ஆயுர்வேத மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பயிற்சிக்கான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்குவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324801®=3&lang=1
****
SK/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324896)
வருகையாளர் எண்ணிக்கை : 13