விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் தூய்மை குறித்த விழிப்புணர்வில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் கவனம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 6:16PM by PIB Chennai

சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், மாணவர்களின் மேம்பட்ட ஆரோக்கியத்திற்காக, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இந்த இயக்கத்தை விரிவான அளவில் முன்னெடுத்துச் செல்வதையும் கவுன்சில் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

சிறப்பு இயக்கத்தின் கீழ், வருகை தருபவர்கள், பணிபுரிபவர்களின் நலனுக்காக, இடத்தின் தோற்றத்தை மேம்படுத்தும் பணிகளும், தீங்கு விளைவிக்கும் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் தூய்மைப் பணி, வளாகத்திற்குள் தூய்மையான, சுகாதாரமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழலைப் பேணுவதிலும், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324471&reg=3&lang=1

***

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324732) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese