தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானில் அரசுப் பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரை சேதம் அடைந்து விழுந்ததில் மாணவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 5:49PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் மூன்று மாணவர்கள் மீது, வகுப்பறையின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அவர்கள் காயமடைந்ததாக வெளியான ஊடக செய்தி ஒன்றை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. தகவல்களின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் சம்பவம் நடந்தபோது ஆசிரியர்கள் பள்ளியில் இல்லை. காயமடைந்த மாணவர்கள் தாங்களாகவே வீட்டிற்கு நடந்து சென்றுள்ளனர். பின்னர் அவர்களது குடும்பத்தினர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

செய்தியின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், அவை மனித உரிமை மீறல் தொடர்பான கடுமையான பிரச்சினைகளை எழுப்புகின்றன என்று ஆணையம் கூறியுள்ளது. எனவே, இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உதய்பூர் மாவட்ட ஆட்சியருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காயமடைந்த மாணவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களும் அதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324436&reg=3&lang=1

(Release ID : 2324436)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324722) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी