ஆயுஷ்
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் 37.74 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து சாதனை
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 7:36PM by PIB Chennai
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (ஏஐஐஏ) தனது சுகாதார கட்டமைப்பின் மூலம் 37.74 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து, 10 ஆண்டு கால சேவையை நிறைவு செய்துள்ளது.
இந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், நிறுவனத்தின் மருத்துவச் சேவைகள் மற்றும் சுகாதாரச் செயல்பாடுகள் எவ்வாறு விரிவடைந்துள்ளன என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2016 அக்டோபர் முதல் 2026 செப்டம்பர் 2026 வரையிலான காலத்தில், நிறுவனத்தின் முதன்மை வளாகம் மற்றும் அதனுடன் இணைந்த பிற மையங்கள் மூலம் மொத்தம் 37,74,524 நோயாளிகள் மருத்துவச் சேவைகளைப் பெற்றுள்ளனர்.
இந்த சாதனை, நோயாளிகளுக்கு தரமான பராமரிப்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சியின் மூலம் ஆயுர்வேத அடிப்படையிலான சுகாதார சேவையை வலுப்படுத்த நிறுவனம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளையும், அதன் விரிவடைந்து வரும் மருத்துவச் செயல்பாடுகளையும் எடுத்துக் காட்டுகிறது. புதுதில்லி சரிதா விகாரில் அமைந்துள்ள முதன்மை வளாகத்தில் மட்டும் சுமார் 30,37,077 பேர் பயனடைந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324520®=3&lang=1
செய்தி அடையாள எண்:2324520
***
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324718)
வருகையாளர் எண்ணிக்கை : 11