புவி அறிவியல் அமைச்சகம்
ஐஐடிஎம் சார்பில் பருநிலை அறிவியல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 3:45PM by PIB Chennai
இந்தியாவிற்கான பருவநிலை அறிவியல் சேவைகள் மன்றத்தின் முதல் கலந்தாய்வுக் கூட்டம், இன்று (2026 அக்டோபர் 17) புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனமான ஐஐடிஎம்-ல் நடைபெற்றது.
கொள்கை சார்ந்த தகவல்களுக்கும், தகவலறிந்து உரிய வகையில் முடிவெடுப்பதற்கும் ஆதரவளிக்கும் வகையில், பருவநிலை அறிவியலை நடைமுறைச் சேவைகளுடன் இணைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப அமர்வுகளில் வானிலை பருவநிலை சூழல்கள், தரவுகள், பருவநிலை சேவைகள் தொடர்பான தகவல் அமைப்பின் அவசியம் ஆகியவை குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
கருப்பொருள் அமர்வுகள், துறை சார்ந்த பருவநிலைத் தகவல் தேவைகள், பயன்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்கான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
ஐஐடிஎம்-ன் இயக்குநர் டாக்டர் ஏ. சூர்யசந்திர ராவ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை ஐஐடிஎம் யூடியூப் அலைவரிசையில் இந்த இணைப்பில் காணலாம்: https://youtube.com/live/kOTL91NGmFg?feature=share
மேலும் இவர்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324660®=3&lang=1
(Release ID : 2324660)
****
SK/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324712)
வருகையாளர் எண்ணிக்கை : 12