சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு, நல்வாழ்வை நோக்கிய பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 3:55PM by PIB Chennai
போதைப்பொருள் பயன்பாட்டால் அவதிப்படும் அனைவரின் வாழ்க்கையையும் மீண்டும் சிறப்பாக கட்டமைப்பதில், உரிய சிகிச்சை, உளவியல் ஆதரவு, மறுவாழ்வு நடைமுறைகள் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த ராகுல் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி கடும் சவால்களை எதிர்கொண்டார்.
27 ஏப்ரல் 2026 அன்று, போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ் அவர் உதவி பெற்றார். இந்த ஆதரவில், கட்டமைக்கப்பட்ட மறுவாழ்வுச் சூழலில் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை, மருத்துவப் பராமரிப்பு, உளவியல் சிகிச்சை, ஆலோசனை ஆகியவை அடங்கும்.
விரிவான பராமரிப்பும் சிகிச்சையும், உணர்ச்சி ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை அவருக்கு அளித்தது.
போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் இத்திட்டத்தின் பங்கை, இந்தப் பயனாளியின் அனுபவம் எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324663®=3&lang=1
Release ID : 2324663
****
SK/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324704)
வருகையாளர் எண்ணிக்கை : 12