சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
அரசுத் திட்டத்தின் ஆதரவால் கண்ணியம் நிறைந்த வாழ்வை அமைத்துக் கொண்ட மகாராஷ்டிரா தம்பதி
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 4:17PM by PIB Chennai
திரு அனிகேத் அதிக் சப்கல், திருமதி மீனாட்சி ஹனுமந்த் படோலே ஆகியோர், சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் தங்கள் புதிய குடும்ப வாழ்க்கையை அமைக்கத் தொடங்கியபோது, நிதி சவால்களையும், சமூக ரீதியான சவால்களையும் எதிர்கொண்டனர்.
இந்த இக்கட்டான கட்டத்தில், மகாராஷ்டிர அரசின் சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்ட கலப்புத் திருமண ஊக்கத் திட்டம், அந்தத் தம்பதியினருக்கு நிதி உதவியை வழங்கியது. இந்த ஆதரவு தன்னிறைவான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்க அவர்களுக்கு உதவியது.
இந்த உதவி, தம்பதியரின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தி அவர்களை ஊக்குவித்தது.
சாதி கடந்த திருமணத்தைத் தேர்ந்தெடுக்கும் தம்பதியினருக்கு அரசு ஆதரவளிப்பதால் ஏற்படும் பலன்களை திரு அனிகேத் அதிக் சப்கல், திருமதி மீனாட்சி ஹனுமந்த் படோலே ஆகியோரின் அனுபவம் எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு நான் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324672®=3&lang=1
(Release ID : 2324672)
****
SK/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324702)
வருகையாளர் எண்ணிக்கை : 13