சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் தீர்வுகளை உருவாக்குவது குறித்து, புத்தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கலந்துரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 2:06PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், துறை (EFCC) அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், தில்லி தேசிய தலை நகரப் பகுதியில் நிலவும் காற்று மாசுபாடு சவாலை எதிர்கொள்வதற்காக, நடைமுறைக்கு உகந்த, தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை உருவாக்குவது குறித்துப் புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (17.10.2026) கலந்துரையாடினார். இந்நிகழ்வில், மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், தில்லி அரசு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
தொழில்நுட்பத்தின் மூலம் காற்றின் தரக் கண்காணிப்பை வலுப்படுத்துதல் போன்ற தற்போதைய நடவடிக்கைகளுக்கு இந்தக் கலந்துரையாடல் துணைபுரியும் என அமைச்சர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்துறை உமிழ்வு மீறல்களைக் கண்டறிதல், டீசல் ஜெனரேட்டர் உமிழ்வைக் கண்காணித்தல், கட்டுமான, இடிப்புத் தளங்களில் தூசியைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய திரு பூபேந்தர் யாதவ், புத்தொழில் நிறுவனங்களுடனான இந்த கலந்துரையாடல், கொள்கை வகுப்பாளர்களுக்கும் தொழில்நுட்பப் புத்தாக்குநர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதுமையான முயற்சி என்று எடுத்துரைத்தார். இத்தகைய ஈடுபாடு, கொள்கை அமலாக்கத்தில் சீரான தன்மையைக் கொண்டுவரவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் உதவும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324638®=3&lang=1
(Release ID : 2324638)
****
SK/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324665)
வருகையாளர் எண்ணிக்கை : 10