பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் பல்நோக்குக் கப்பலான ஐஎன்எஸ் சமர்த்தக்
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 9:09PM by PIB Chennai
இந்தியக் கடற்படையின் பல்நோக்குக் கப்பல் வரிசையில் முதலாவதான 'ஐஎன்எஸ் சமர்த்தக்', இன்று இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன், கர்நாடக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர், கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எல்&டி கப்பல் கட்டும் தளத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் சமர்த்தக், இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டுமானப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். ஒரு இந்திய தனியார் கப்பல் கட்டும் தளத்தால் கட்டமைக்கப்பட்ட முதல் பெரிய போர்க்கப்பலாக இது அமைந்துள்ளது. இந்தக் கப்பல் பணியில் சேர்க்கப்படுவது, நாட்டின் தனியார் கப்பல் கட்டுமானத் துறையின் வளர்ந்து வரும் முதிர்ச்சியையும் திறனையும் பறைசாற்றுகிறது. மேலும் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதில், இந்தியக் கடற்படைக்கும் இந்தியக் கப்பல் கட்டுமானத் துறைக்கும் இடையிலான ஆழமான ஒருங்கிணைப்பையும் இது பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324581®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324598)
வருகையாளர் எண்ணிக்கை : 5