சுரங்கங்கள் அமைச்சகம்
தூய்மைக்கான சிறப்பு இயக்கத்தில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுகிறது சுரங்க அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 5:18PM by PIB Chennai
2026 அக்டோபர் 2 அன்று தொடங்கப்பட்ட தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6-ன் முதல் 15 நாட்களில், சுரங்க அமைச்சகமும் அதன் கள அலுவலகங்களும் நிலைத்தன்மை, தூய்மை, பொறுப்பான வள மேலாண்மையை ஊக்குவிப்பதற்காகப் பல முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மின்னணுக் கழிவுகளைத் திறம்படச் சேகரித்தல், பிரித்தல், அகற்றுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அமைச்சகமும் அதன் கள அமைப்புகளும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
முதல் 15 நாட்களில், அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் பணியிடச் சூழலையும் மேம்படுத்துவதற்காக பல குறிப்பிடத்தக்க சிறந்த நடைமுறைகளைச் செயல்படுத்தின. நீர் பாதுகாப்பையும் நிலையான நீர் மேலாண்மையையும் ஊக்குவிப்பதற்காக, ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம் ராஜஸ்தானில் உள் வளாகத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தொடங்கியது. பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கவும், ஜார்க்கண்டில் உள்ள இந்தியன் காப்பர் வளாகத்தில் மரக்கன்று நடும் இயக்கமும் மேற்கொள்ளப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் தலைமையகம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் பயன்பாட்டை நிறுத்தி , அவற்றுக்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய துருப்பிடிக்காத எஃகு அல்லது உலோகத் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
சிறப்பு இயக்கம் 6.0-ன் முதல் பதினைந்து நாட்களில் எட்டப்பட்ட முன்னேற்றமானது, அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்புகளின் கூட்டு முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324413®=3&lang=1
(Release ID : 2324413)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324592)
வருகையாளர் எண்ணிக்கை : 8