நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கத்தில் உணவு, பொது விநியோகத் துறை சிறப்பான பங்களிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 5:14PM by PIB Chennai

உணவு, பொது விநியோகத் துறை, அரசு அலுவலகங்களில் தூய்மையை நிறுவனமயமாக்குவதில் கவனம் செலுத்தி, 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை சிறப்பு இயக்கம் 6-ஐ தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, 30.09.2026 அன்று மூத்த அதிகாரிகளுடன் செயல் திட்டத்தை ஆய்வு செய்தார்.

சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்காக, இந்த இயக்கத்தின் முன்னேற்றம், மூத்த அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது .

சிறப்பு இயக்கம் 6-ன் கீழ், 2026 அக்டோபர் 15 வரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பின்வருமாறு:

* பொதுமக்களின் குறைகளில் 1479-ல், 710 குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

* 1,10,600 கோப்புகளில் 35,743 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

* பல்வேறு செயல்பாடுகள் மூலம் ₹10,76,262 வருவாய் ஈட்டப்பட்டதோடு, 23,843 சதுர அடி இடமும் விடுவிக்கப்பட்டுள்ளது.

தூய்மையான, ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, தூய்மையை ஊக்குவிக்க, இத்துறை சிறப்பு இயக்கம் 6-ல் தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324407&reg=3&lang=1

(Release ID : 2324407)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324591) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese