பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
தில்லி ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு மாநாட்டின் நிறைவு அமர்வில் மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 8:09PM by PIB Chennai
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, இன்று (16.10.2026) புதுதில்லியில் உள்ள இந்தியா ஹேபிடேட் சென்டரின் ஸ்டெய்ன் அரங்கில், தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த 'வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான பாதைகள்: ஒரு நூற்றாண்டு மாநாடு' என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய மாநாட்டில் நிறைவுரை ஆற்றினார்.
பேராசிரியர்கள், பொருளாதார வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய திரு ஹர்தீப் சிங் பூரி, கற்பனையையும் அனுபவத்தையும் ஒன்றிணைப்பதே ஒரு கல்வி நிறுவனத்தின் பணியாகும் என்றார். இந்தப் பரிமாற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு நிறுவனம், தனது அறிவுசார் வாழ்வைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
உலகப் பொருளாதார சவால்கள், புவிசார் அரசியல் நிலைகளுக்கு மத்தியில் இந்தியாவின் மீள்திறனை எடுத்துரைத்த அமைச்சர், எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்தியும் உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்தியும், நெருக்கடிகளின் போது இந்தியா அத்தியாவசிய எரிபொருள் விநியோகத்தை வெற்றிகரமாகப் பராமரித்தது என்று குறிப்பிட்டார்.
நம்பகத்தன்மை, புதுமை, சர்வதேச நம்பிக்கை ஆகியவற்றில் வேரூன்றிய உலகத் தரம் வாய்ந்த இந்திய நிறுவனங்களையும் தொழில் நிறுவனங்களையும் கட்டியெழுப்புமாறு அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கையை திரு ஹர்தீப் சிங் பூரி வெளிப்படுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324548®=3&lang=1
(Release ID : 2324548)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324590)
வருகையாளர் எண்ணிக்கை : 12