சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மறுவாழ்வு முயற்சிகளால் போதைப் பொருளை சார்ந்திருப்பதிலிருந்து மீண்டவரின் வாழ்க்கைப் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 3:52PM by PIB Chennai
திரு ரமேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபருக்கு, சரியான நேரத்தில் வழங்கப்பட்ட மறுவாழ்வு காரணமாக, அவர் போதைப் பொருளை சார்ந்திருப்பதிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான, கண்ணியமான எதிர்காலத்தை நோக்கிச் செயல்படுகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தைச் சேர்ந்த திரு ரமேஷ் குமார், தனது 55 வயதில், நீண்டகாலமாக போதைப்பொருளை சார்ந்திருந்ததால் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரும், நடுநிலைப் பள்ளி வரை மட்டுமே படித்தவருமான அவர், வேலையில்லாமல் இருந்தார். மேலும், போதைப் பொருளை சார்ந்திருப்பதிலிருந்து அவரது உடல், மனநலம், ஆகியவற்றில் சரிவு ஏற்பட்டது.
போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தின் மாண்ட்லாவில் நடத்தப்படும் மையத்தில் அவருக்கு ஆதரவு கிடைத்ததால் அவருடைய வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. 2026 மே 7 அன்று, விரிவான உதவியை அவர் பெறத் தொடங்கினார்.
மையத்தின் ஆதரவுடன், திரு ரமேஷ் குமார் குணமடைவதில் ஊக்கமளிக்கும் முன்னேற்றம் கண்டுள்ளார். அவரது உடல், மனநலம் மேம்பட்டுள்ளதுடன், அவர் மிகுந்த மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் மீண்டும் பெற்றுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324350®=3&lang=1
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324512)
வருகையாளர் எண்ணிக்கை : 15