மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
பாஷினி தளமும் பெங்களூரு ஐஐஎஸ்சி-யும் இணைந்து சௌராஷ்டிரா மொழி தொடர்பான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 2:32PM by PIB Chennai
குறைந்த வளங்களைக் கொண்ட இந்திய மொழிகளுக்கான மொழித் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய தகவல் தொழில்நுட்ப மின்னணு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின், பாஷினி பிரிவானது, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனமான ஐஐஎஸ்சி-யுடன் இணைந்து, சௌராஷ்டிரா மொழியை உரையிலிருந்து பேச்சாக மாற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாதிரியை உருவாக்கியுள்ளது. இது தமிழ்நாட்டில் சௌராஷ்டிர சமூகத்தினரால் பிரதானமாகப் பேசப்படும் சிறுபான்மை மொழியாகும்.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மாதிரிகள், விஐடிஎஸ் என்ற தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பயன்படுத்துவதோடு, எழுத்து வடிவத்திலிருந்து நேரடியாக சௌராஷ்டிரப் பேச்சை உருவாக்கும் திறன் கொண்டவை. இந்த மாதிரிகளில் ஆண், பெண் குரல்கள் உள்ளன.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சுமார் 2.48 லட்சம் மக்களால் பேசப்படும் சௌராஷ்டிர மொழிக்கு, டிஜிட்டல் உலகில் ஒப்பீட்டளவில் தொழில்நுட்ப வளங்கள் உள்ளன. இந்த மாதிரிகளின் உருவாக்கம், சௌராஷ்டிரா மொழியை டிஜிட்டல் சூழலுக்குள் கொண்டுவர உதவுவதன் மூலம், மொழிப் பாதுகாப்பை வலுப்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324289®=3&lang=1
***
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324466)
வருகையாளர் எண்ணிக்கை : 15