சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பணியாளராக இருந்து தொழில்முனைவோரான ஷிவ் லாலின் வாழ்க்கைப் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 4:01PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவைச் சேர்ந்த 44 வயதான திரு ஷிவ் லால், தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, கடந்த இருப்பது ஆண்டுகளாகக் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்குகளைச் சுத்தம் செய்யும் பணியாளராக உழைத்து வந்தார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர், பல ஆண்டுகள் கடினமாக உழைத்தும், அர்ப்பணிப்புடன் செயல்பட்டும், தொடர்ந்து நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வந்தார்.

12 ஆகஸ்ட் 2025 அன்று ஒரு முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது. அப்போது திரு ஷிவ் லால், 'நமாஸ்தே' திட்டத்தின் ஒரு பகுதியான தூய்மைப் பணியாளர்களுக்கான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி உதவியைப் பெற்றார். இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மூலதன மானியம், அவருக்கு ஒரு டிராக்டர் மற்றும் அதனுடன் இணைந்த உறிஞ்சும் இயந்திரத்தை வாங்கவும், அதன் மூலம் சொந்தமாக சுகாதாரச் சேவைத் தொழிலைத் தொடங்கவும் உதவியது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.11.34 லட்சம் ஆகும். இதில் ரூ. 7,25,500 கடனாகவும், ரூ 4,08,500 மூலதன மானியமாகவும் வழங்கப்பட்டது. இந்த நிதி உதவி, அவர் எதிர்கொண்ட பெரும் பொருளாதாரத் தடையைத் தாண்டி, ஒரு உதவியாளராகப் பணியாற்றிய நிலையிலிருந்து, சுயமாகத் தொழில் புரியும் ஒரு தொழில்முனைவோராக மாற அவருக்கு உதவியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323848&reg=3&lang=1    

***

SK/SV/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2324405) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी