சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பயிர் கழிவுகளை எரிப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரன் மாவட்ட நிர்வாகங்களுடன் சிஏகியுஎம் ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2026 6:41PM by PIB Chennai
தேசிய தலைநகர் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரத்தை நிர்வகிப்பதற்கான ஆணையத்தின் (சிஏகியூஎம்) உயர்மட்டக் குழு ஒன்று, அதன் தொழில்நுட்ப உறுப்பினர் டாக்டர் எஸ் டி அத்திரி தலைமையில், நெல் அறுவடைப் பருவத்தின்போது பஞ்சாபின் அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரன் மாவட்டங்களைப் பார்வையிட்டது. நெல் அறுவடைக்குப் பிந்தைய வைக்கோல் கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களாக இம்மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கள ஆய்வுகளைத் தவிர, இந்தக் குழு இரு மாவட்டங்களின் துணை ஆணையர்கள், மாவட்ட அளவிலான இதர அதிகாரிகளுடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியது. பறக்கும் படைகளை ஈடுபடுத்துவதுடன், குளிர்காலத்தில் தேசிய தலைநகர் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கும் நெல் வைக்கோல் கழிவுகளை எரிப்பதைக் குறைத்து முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தை அடைவதற்கு ஆணையம் அளிக்கும் உயர் முன்னுரிமையின் ஒரு பகுதியாகவே இந்தப் பயணம் அமைந்துள்ளது.
ஆய்வுக் கூட்டத்துடன் சேர்த்து, வயல்வெளிகளில் பயிர் கழிவுகளை எரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்யவும், கள நிலவரத்தை மதிப்பிடவும், அமிர்தசரஸ், டர்ன் தரன் மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் இடங்களுக்கு உயர்மட்டக் குழு கள ஆய்வுகளையும் மேற்கொண்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321780®=3&lang=1
***
SS/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324342)
வருகையாளர் எண்ணிக்கை : 6