அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சென்னை, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி வளாகத்தில் நடைபெற்ற ஹைட்ரஜன் பயன்பாடு அடிப்படையிலான முன்னேற்றங்கள் குறித்த பயிலரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 2:36PM by PIB Chennai

தேசிய ஹைட்ரஜன், எரிபொருள் மின்கல தினத்தையொட்டி, ஹைட்ரஜன் பயன்பாட்டில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், உருவாகி வரும் வாய்ப்புகள், சவால்கள் குறித்த பயிலரங்கு நடைபெற்றது.

சென்னை, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில், புகழ்பெற்ற விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான, தூள் உலோகவியல்,  புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் பயிலரங்கில் உரையாற்றிய அதன் இயக்குநர் டாக்டர் ஆர் விஜய், மின் வினையூக்கிகள், இருமுனைத் தகடுகள், சவ்வு மின்முனை அமைப்புகள், எரிபொருள் மின்கல அடுக்குகள், ஹைட்ரஜன் உற்பத்திக்கான மின்பகுப்பிகள் போன்ற உள்நாட்டு ஹைட்ரஜன்,  எரிபொருள் மின்கல தொழில்நுட்பங்களுக்கான மேம்பட்ட பொருட்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியா ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

அக்டோபர் 13, 2026 அன்று நடைபெற்ற இந்தப் பயிலரங்கில், ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு, சுத்திகரிப்பு, பயன்பாடு, குறிப்பாக, எரிபொருள் மின்கல தொழில்நுட்பங்கள், போக்குவரத்து பயன்பாடுகள், பாதுகாப்பு, தரநிலைகள், தொழில்துறை பயன்பாடு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323786&reg=3&lang=1   

***

KS/SV/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2324236) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese