பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மின்னணு நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்த தேசிய மாநாடு தரம்சாலாவில் நடைபெறுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 2:48PM by PIB Chennai
மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை, இமாச்சலப் பிரதேச மாநில அரசுடன் இணைந்து, 2026 அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில், தரம்சாலாவில் மின்னணு நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்த தேசிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டில், நாடு முழுவதிலும் உள்ள மூத்த அரசு அதிகாரிகள் துறை சார்ந்த வல்லுநர்கள் ஒன்றிணைந்து, மின்னணு நிர்வாகச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மாற்றம், புத்தாக்கம், பயனுள்ள நிர்வாக நடைமுறைகளைச் செயல்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கவுள்ளனர்.
நிர்வாக சீர்திருத்தங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் துறை, தேசிய அளவிலான இத்தகைய மாநாடுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது. மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்-கின் வழிகாட்டுதலின் கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், நிர்வாக சீர்திருத்தங்களை மாநிலங்களுக்கும், மக்களுக்கும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323796®=3&lang=1
***
KS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324235)
வருகையாளர் எண்ணிக்கை : 10