பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய - கொரிய கடலோரக் காவல் படைகளுக்கு இடையிலான 14-வது உயர்மட்டக் கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 8:00PM by PIB Chennai
இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் கொரியக் கடலோரக் காவல்படை இடையிலான 14-வது உயர்மட்டக் கூட்டம், 2026 அக்டோபர் 14 அன்று கொரியாவின் இன்சியானில் நடைபெற்றது. இரு நாடுகளின் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, உத்திசார் ஈடுபாட்டை மேலும் மேம்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தின் போது, இரு தரப்பினரும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்பாட்டு கட்டமைப்புகளை மறுஆய்வு செய்தனர். மேலும், கடல்சார் தேடல் மற்றும் மீட்பு, கடல்சார் மாசு தடுப்பு, கடல்சார் சட்ட அமலாக்கம், திறன் மேம்பாடு மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324098®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324162)
வருகையாளர் எண்ணிக்கை : 7