சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பீகாரில் போக்குவரத்து இணைப்பு, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நான்கு வழிச்சாலைத் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 4:25PM by PIB Chennai

விவசாயப் பகுதிகள், தொழில் மையங்கள், எல்லைப் பகுதிகளைப்  சந்தைகளுடன் இணைப்பதில், சாலை உள்கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

பீகாரில் முசாபர்பூர்–சீதாமர்ஹி–சோன்பர்சா இடையே, முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார மையத்தையும், இந்திய-நேபாள எல்லையையும் இணைக்கும் முக்கியப் பாதையாக தேசிய நெடுஞ்சாலை-22 திகழ்கிறது.

இந்த 82.57 கி.மீ தேசிய நெடுஞ்சாலையை ரூ.3,590.73 கோடி செலவில் நான்கு வழிச் சாலையாக மேம்படுத்த ஆகஸ்ட் 2026-ல், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA)  ஒப்புதல் அளித்தது.

இந்த வழித்தடத்தை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்துவது, இப்பகுதியில்  போக்குவரத்துத் திறனை அதிகரிப்பத்துடன் மண்டல அளவிலான போக்குவரத்து இணைப்பையும் வலுப்படுத்தும். மேலும், இது சாலை, ரயில், பிற போக்குவரத்து  உள்கட்டமைப்பு வசதிகளுக்கு இடையேயான இணைப்புகளை வலுப்படுத்தி, அந்த மாநிலத்தின் வட பகுதியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322801&reg=3&lang=1   

-----

SK/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324070) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी