சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
கலப்புத் திருமண ஊக்குவிப்புத் திட்டம் கலப்புத் திருமணம் புரிவோருக்கு உதவுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 2:15PM by PIB Chennai
திருமணம் என்பது இரு தனி நபர்கள் இணைவது மட்டுமின்றி சமூகத்தில் பரஸ்பர மரியாதை, சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பும் ஆகும். திரு ஆதித்ய சாது சாவந்த், திருமதி குஷி பிரவீன் ஷஹா ஆகியோருக்கு கலப்புத் திருமணம் என்பது இதுபோன்ற மாண்புகளை ஊக்குவிப்பதற்கும், பரஸ்பர புரிதல், சமூக சமத்துவத்தின் அடிப்படையில் எதிர்காலத்தை உருவாக்கவும் அவர்கள் மேற்கண்ட திட்டமிட்ட நடவடிக்கையாகும்.
2026 ஜீன் 1 அன்று நடைபெற்ற அவர்களுடைய திருமணத்திற்கு பின் புதிய வீட்டை அமைக்கும் பணியின் போது அத்தம்பதி சில நிதி மற்றும் சமூக சவால்களை எதிர்கொண்டனர். புதிதாக திருமணமான மற்ற தம்பதியினரைப் போன்றே அவர்களுக்கும் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கவும், எதிர்காலத்தைத் திட்டமிடவும் அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தில் அரசின் கலப்புத் திருமண ஊக்குவிப்புத் திட்டம் அவர்களுக்கு மதிப்புமிக்க ஆதரவை அளித்தது.
இத்திட்டத்தின் கீழ் கிடைத்த நிதி உதவியின் மூலம் அத்தம்பதியினர் தங்களுடைய திருமண வாழ்க்கையை உறுதியான அடித்தளத்துடன் தொடங்க உதவியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323772®=3&lang=1
***
SS/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324056)
வருகையாளர் எண்ணிக்கை : 18