தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
கொல்கத்தாவின் சில பகுதிகளில், மொபைல் சேவைகளின் தரநிலை குறித்து ட்ராய் மதிப்பீடு
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 2:34PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), ஜூலை 2026-ல் கொல்கத்தா நகர்புறம், ஹவுரா, ஹூக்லி மாவட்டங்களின் சில பகுதிகளில் மேற்கொண்ட மொபைல் சேவைகளின் தரநிலை குறித்த சோதனை முடிவுகளை, தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் தகவலுக்காக வெளியிட்டுள்ளது.
தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் மொபைல் சேவைகளின் (குரல், தரவு ஆகிய இரண்டிற்கும்) தற்போதைய தர நிலையை மதிப்பீடு செய்து சரிபார்ப்பதற்காக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின் போது, மொபைல் சேவைகள் கிடைக்கும் பகுதிகள், அழைப்பு துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகியவற்றின் வேகம் போன்ற முக்கிய சேவைத் தர அளவீடுகளில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது. இந்த முடிவுகள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படுவதுடன், சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கும் வகையிலும் வெளியிடப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323785®=3&lang=1
***
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324054)
வருகையாளர் எண்ணிக்கை : 9