தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அந்தமான் & நிக்கோபார் தீவுகளில், தொலைத்தொடர்பு சேவையின் தரநிலை மதிப்பீடு குறித்த அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 1:45PM by PIB Chennai
பொது தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் தகவலுக்காக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) மொபைல் சேவையின் தரநிலை குறித்த களச் சோதனையின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அந்தமான் & நிக்கோபார் தீவுகளில், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் மொபைல் சேவைகளின் தரநிலை குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) ஆகஸ்ட் 2026-ல் மதிப்பீடு செய்தது.
தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் மொபைல் சேவைகளின் (குரல், தரவு ஆகிய இரண்டிலும்) தற்போதைய தரத்தை மதிப்பீடு செய்து சரிபார்ப்பதே இந்தச் சோதனையின் நோக்கமாகும்.
இந்தச் சோதனையின் போது, மொபைல் சேவை கிடைக்கும் பகுதிகள், அழைப்பு துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகியவற்றின் வேகம் போன்ற முக்கிய சேவைத் தர அளவுருக்களில் சேவை வழங்குநர்களின் செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது. இந்த முடிவுகள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படுவதுடன், சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது சேவைகளை மேம்படுத்தவும் உதவுகின்றன.
இந்தக் களச் சோதனைகள், நகரங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொதுப் போக்குவரத்து மையங்கள் போன்ற பல்வேறு சூழல்களில், அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் மொபைல் செயல்பாட்டை நேரடியாக அளவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323754®=3&lang=1
***
(Release ID:2323754)
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324053)
வருகையாளர் எண்ணிக்கை : 12