சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
உரிய நேரத்தில் ஆலோசனை, மருத்துவ உதவி, மறுவாழ்வு ஆகியவற்றைப் பெறுவதன் மூலம் போதைப்பொருளை சார்ந்திருப்பதிலிருந்து தனிநபர்கள் விடுபட முடிகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 1:50PM by PIB Chennai
உரிய நேரத்தில் ஆலோசனை, மருத்துவ உதவி, மறுவாழ்வு ஆகியவற்றைப் பெறுவதன் மூலம் போதைப்பொருளை சார்ந்திருப்பதிலிருந்து தனிநபர்கள் விடுபடவும், தங்களுடைய வாழ்க்கையை மறுகட்டமைக்கவும் முடிகிறது.
ஒடிசாவில் தேன்கனல் மாவட்டத்தைச் சேர்ந்த சுயதொழில் புரியும் 47 வயதான ராஜேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுமார் 23 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாக இருந்தார். மதுவினால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப உறவுகள், தொழில் ரீதியான பொறுப்புகள் ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாயின. அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனைகள், மன உளைச்சல் காரணமாக அவருடைய திருமண வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு தனது மனைவியைப் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தேன்கனலில் உள்ள ஆஷ்ரா – ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த சமூகப் பணியாளருடனான சந்திப்பு அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
போதைப்பொருள் உபயோகத் தடுப்புக்கான தேசிய செயல்திட்டத்தின் ஆதரவுடன் ராஜேஷிற்கு கிடைத்த மறுவாழ்வு சேவைகள் மது அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு தமது வாழ்க்கையை மறுகட்டமைக்க அவருக்கு உதவியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323759®=3&lang=1
***
SS/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324052)
வருகையாளர் எண்ணிக்கை : 11