சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துணிச்சலின் சிறகடிப்பு: சுயசார்பின் அடையாளம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 5:21PM by PIB Chennai

சரியான நேரத்தில் கிடைக்கும் நிதியுதவி, பெண்களின் பொருளாதாரச் சவால்களைப் போக்கி, தற்சார்பு வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதற்கு சான்றாக விளங்குகிறார் கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த சுனிதா மோள்.

12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், இல்லத்தரசியாகக் குடும்பத்தைப் பராமரித்தபடி 10 ஆண்டுகள் வேலையின்றி இருந்தார். இருப்பினும், சுயவருமானம் வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது.

2023-இல், தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மகளிர் வாழ்வாதார  திட்டத்தின் கீழ், ரூ.2.85 லட்சம் கடன் உதவி பெற்றார். இதைக் கொண்டு சொந்தமாகப் பேக்கரி தொழிலைத் தொடங்கினார்.

கடின உழைப்பால் தொழிலை வளர்த்த இவர், தற்போது கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு மாதம் ரூ.20,000 வருமானம் ஈட்டுகிறார். இவருடைய இந்த வெற்றி, பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும் தற்சார்புக்கும் நற்சான்றாக அமைந்துள்ளது. நீண்ட கால வேலையின்மையை, தன்னம்பிக்கை, தொழில்முனைவு மற்றும் தற்சார்பு கொண்ட ஒரு பயணமாக அவர் மாற்றியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323372&reg=3&lang=1

செய்தி அடையாள எண்:2323372

***

TV/VK/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2323900) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी